Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கற்றலோனிய அரசியல் சக்திகள் ஒன்றிணைய அழைப்பு

In
Published: 06:57 GMT, Nov 8, 2017 |
0 Comments
1169
icon_com
This post was written by : Suganthini

ஸ்பெய்ன் அரசாங்கத்துக்கு எதிராக, கற்றலோனிய பிராந்தியத்திலுள்ள அரசியல் சக்திகள் ஒன்றிணைய வேண்டுமென்று, கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Carles Puigdemont)  அழைப்பு விடுத்துள்ளார்.

வானொலிச்சேவையொன்றுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) வழங்கிய நேர்காணலின்போதே, அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ஸ்பெய்ன் அரசாங்கத்தால் எமக்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, கற்றலோனியாவிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும்’ என்றார்.

‘கற்றலோனியாவில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டுமென்பதுடன், அங்கு சுதந்திரமான நடவடிக்கைகள் பேணப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg