Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வியட்நாமில் பாரிய அனர்த்தம்: உயிரிழந்தோர் 70ஆக அதிகரிப்பு

In உலகம்
Published: 07:24 GMT, Nov 8, 2017 |
0 Comments
1141
icon_com
This post was written by : Suganthini

வியட்நாமில் கடும் மழையுடன் ஏற்பட்ட சூறாவளி மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 30 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியட்நாமில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்துவருவதுடன், கடந்த சனிக்கிழமை தாம்ரே எனும் சூறாவளி தாக்கியுள்ளது. இதனையடுத்து, அங்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தங்களில் சிக்கி 70 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காணாமல் போயுள்ளனர்.

மழை காரணமாக வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு இலட்சம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், சுமார் ஒரு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், மழை தொடர்ச்சியாகப் பெய்துவரும் நிலையில் ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்துவருகின்றது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.

viet 2
viet 3
viet 4
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg