Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கற்றலோனிய நெருக்கடி: பொருளாதாரத்தில் பாதிப்பு

In
Published: 07:49 GMT, Nov 8, 2017 |
0 Comments
1136
icon_com
This post was written by : Suganthini

தற்போது கற்றலோனியப் பிராந்தியத்தில் நிலவிவரும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக, பொருளாதாரத்துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஸ்பெய்னைச் சேர்ந்த வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.

பிரஸ்ஸல்ஸில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒன்றுகூடிய ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஸ்பெனைச் சேர்ந்த வர்த்தகத் தலைவர்களும், கற்றலோனிய விவகாரம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.  இதன்போதே, ஸ்பெய்னைச் சேர்ந்த வர்த்தகத் தலைவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘கற்றலோனியாவில் முன்வைக்கப்பட்டுள்ள சுதந்திரப் பிரகடனக் கோரிக்கையால், தற்போது அங்கு நெருக்கடியான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நெருக்கடியான சூழ்நிலைய அப்பிராந்தியத்தின் பொருளாதாரத்துறையிலும் தாக்கம் செலுத்தியுள்ளது.

இருப்பினும், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்தப்படும் பொதுத் தேர்தலில்  ஸ்பெய்ன் அரசாங்கமானது பெரும்பான்மையுடன்  வெற்றி பெற்றால், அப்பிராந்தியத்தில் பொருளாதாரத்துறையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படலாம்’ எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg