சிரியாவில் நச்சுவாயுத் தாக்குதல்: ரஷ்யா மறுப்பு
சிரியாவில் இடம்பெற்ற மோதலின்போது, அந்நாட்டு அரசாங்கம் நச்சுவாயு பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ரஷ்யா நிராகரித்துள்ளது.
இது தொடர்பான சர்வதேச விசாரணை முன்னெடுப்பட்டுவந்த நிலையில், அதன் அறிக்கையில், சிரியாவில் இடம்பெற்ற மோதலின்போது, நச்சுவாயுவை அந்நாட்டு அரசாங்கம் பயன்படுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி, சிரியாவிலுள்ள இட்லிப் மாகாணத்தில் கான் ஷேக்ஹுன் நகரில் இடம்பெற்ற மோதலில் 80 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போதே, நச்சுவாயுத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,
இதேவேளை, எந்தவித இரசாயன ஆயுதங்களையும் தாம் பயன்படுத்தவில்லையென, சிரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விசாரணைக்கான காலஅவகாசம் அடுத்த வாரத்துடன் முடிவடையவுள்ள நிலையில், இதற்கான விசாரணையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு மேலும் காலஅவகாசத்தை ஐ.நா. பாதுகாப்புச்சபை நீடிக்கக்கூடுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.