Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரச அலுவலகங்களில் கொள்ளை: உதவி கோரும் ரொறொன்ரோ பொலிஸார்!

In கனடா
Updated: 10:11 GMT, Nov 8, 2017 | Published: 10:08 GMT, Nov 8, 2017 |
0 Comments
1176
icon_com
This post was written by : Vithushagan
Toronto Police Badge

கனடாவின் ரொறொன்ரோ மாநகரில் அரச அலுவலகங்களில்  வைக்கப்பட்டிருந்த 2 மில்லியன் டொலர் மதிப்பிலான நகைகளை கொள்ளையிட்ட மர்ம நபரை கைது செய்ய ரொறொன்ரோ பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.

ரொறொன்ரோ மாநகரில் King Street West மற்றும் Duncan Street ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள சுங்க இலாகா அலுவலகங்களில் பாதுகாக்கப்பட்டிருந்த நகைகள் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பொருட்களை குறித்த நபர் கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில்,    சுங்க இலாகா அலுவலகங்களில் உள்ள    கண்காணிப்பு கமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த பொலிஸார், அதில் பதிவான சந்தேக நபரது புகைப்படத்தை  வெளியிட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் சுமார் 6 அடி உயரமும் 145 பவுண்ட்ஸ் எடையும் கொண்ட அந்த நபர் குறித்த தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg