Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸில் பருவநிலை மாநாடு: ட்ரம்ப்புக்கு அழைப்பில்லை

In உலகம்
Updated: 09:51 GMT, Nov 8, 2017 | Published: 09:51 GMT, Nov 8, 2017 |
0 Comments
1179
This post was written by : Suganthini

பிரான்ஸ் தலைநகரான பரிஸில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி பருவநிலை மாநாடு நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் 800க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள்  மற்றும் பொதுப்பங்குதாரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்கு 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையென, பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

196 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற தற்போதைய பருவநிலை தொடர்பான கலந்துரையாடல், ஜேர்மனியின் பான் நகரில் நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறியுள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜுன் மாதம் கைச்சத்தாகிய கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்திலிருந்து, வாபஸ் பெற்றுக்கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது,

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg