Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய் மல்லையாவின் ராஜவாழ்வு முடிவுக்கு வருகிறது?

In இந்தியா
Updated: 13:30 GMT, Nov 8, 2017 | Published: 10:24 GMT, Nov 8, 2017 |
0 Comments
2664
This post was written by : Puvanes

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் முன்னிலையாகாவிட்டால், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என டெல்லி உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடிகளுக்கும் அதிகமான கடன்களைப் பெற்றுக் கொண்டு அவற்றினைத் திரும்பச் செலுத்தாமல் உள்ளதாக குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது லண்டனில் வசித்துவரும் அவரை மீண்டும் இந்தியாவிற்கு நாடு கடத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் 2 இலட்சம் பணப்பறிமாற்றத்தில் மல்லையா ஈடுபட்டது தொடர்பில் நீண்டநாள் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் அமலாக்கத்துறை இன்று டெல்லி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்தது.

குறித்த மனுவின் மூலம் விஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை ஒன்றினை முன்வைத்தது.

அதன்படி மனு மீதான விசாரணை நடத்தப்பட்டபோது டிசம்பர் 18ஆம் திகதிக்குள் விஜய் மல்லையா நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை, குறித்த வழக்கு தொடர்பில் விசாரணைகளுக்கு வரவேண்டும் என ஏற்கனவே பல தடவைகள் அமலாக்கத்துறையும், நீதிமன்றமும் விஜய் மல்லையாவிற்கு அறிவித்திருந்த போதும் அவர் இதுவரை நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.

மேலும், கடந்த மாதம் 5ஆம் திகதி கருப்புப்பண பறிமாற்றம் தொடர்பில் லண்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg