Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவையான இறால் பஜ்ஜி

In
Published: 10:24 GMT, Nov 8, 2017 |
0 Comments
1438
icon_com
This post was written by : Vithushagan
Prawnbajji02

தேவையான பொருட்கள்

சுத்தம் செய்த இறால் – 500g
மிளகாய்த்தூள் -5 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் – 1
கோதுமைமா – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
கடலை மா -150 g
அரிசிமா – 50 g
எண்ணெய் , உப்பு – தேவையான அளவு

செய்முறை

இறாலுடன் மஞ்சள்தூள் , உப்பு சேர்த்து வேக வைத்து நீரை வடித்து எடுக்கவும் . அதன் பின்னர் அவித்த இறாலுடன் முன்று தேக்கரண்டி மிளகாய்த்தூள் ,எலுமிச்சம்பழச்சாறு என்பன கலந்து எண்ணெயில் நன்கு வதக்கி ஆற வைக்கவும் .

ஒரு பாத்திரத்தில் 2தேக்கரண்டி மிளகாய்த்தூள் ,கோதுமைமா ,கடலை மா ,அரிசிமா உப்பு என்பன சேர்த்து பஜ்ஜி மாப்பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும் .

சட்டியில் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்கவும் . இறாலை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg