Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்து நாடாளுமன்றில் மர்மப்பொதிகள்!

In
Updated: 11:05 GMT, Nov 8, 2017 | Published: 10:36 GMT, Nov 8, 2017 |
0 Comments
1300
This post was written by : Suganthini

ஸ்கொட்லாந்து நாடாளுமன்ற வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நான்கு பொதிகள் காணப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதுடன் சோதனை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டன.

ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தைச் சேர்ந்த கொன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தப் பொதிகள் அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தப் பொதிகள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் பொலிஸாரும் தீயணைப்புப் படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டு,  சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அப்பொதியினுள் வெள்ளைத்துகள் மாத்திரமே காணப்பட்ட  நிலையில், இது குறித்து அச்சமடையத் தேவையில்லையென்பதுடன், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சம்பவம் இல்லையெனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg