Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாகாண சபை எல்லை நிர்ணயம்- தேசிய ஷூரா சபை, முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு

In இலங்கை
Updated: 11:10 GMT, Nov 8, 2017 | Published: 11:09 GMT, Nov 8, 2017 |
0 Comments
1206
This post was written by : Elakkiya
SRL

முஸ்லிம் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் ஷூராசபையின் அங்கத்துவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் மாகாணசபை தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பில், புதிய கலப்புத் தேர்தல் முறையின் கீழ் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் குறைவடையும் என்ற அச்சத்தின் மத்தியில், தேவையான அளவு முஸ்லிம் பிரதிநிதிகளை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அல்லது சிறுபான்மை வாக்குகள் தீர்மானிக்கும் பலத்தை கொண்டிருக்கும் வகையில் மாகாண தேர்தல் தொகுதி எல்லைகளை வரையறை செய்தல் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், இரட்டை அங்கத்தவர் தொகுதிகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, புதிய தேர்தல் முறை, வாக்குச்சீட்டு வடிவமைப்பு, இரட்டை வாக்களிப்பு முறை போன்ற விவகாரங்களை பிறிதொரு அமர்வில் ஆராய்வதற்கும் இணக்கம் காணப்பட்டது.

கடந்த செப்டம்பர் 20 ஆம் திகதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் தொகுதிகள் எல்லை நிர்ணயம் தொடர்பாக ஆய்வு செய்து ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள விஷேட குழுவிடம் ஷூரா சபை அறிக்கை சமர்ப்பிக்கவுள்ள நிலையில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg