Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகமாக சீனித்தம்பி மோகனராஜா நியமனம்

In இலங்கை
Updated: 11:28 GMT, Nov 8, 2017 | Published: 11:25 GMT, Nov 8, 2017 |
0 Comments
1107
icon_com
This post was written by : Elakkiya
DSC_0548

இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 37 ஆவது நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகமாக மட்டக்களப்பைச் சேர்ந்த சீனித்தம்பி மோகனராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி நேற்று முன்தினம் திங்கட்கிழமை அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா முன்னிலையில், இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 37 ஆவது நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகமாக தனது கடமைகளை அவர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் விசேட பட்டத்தையும் நெதர்லாந்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்ட சீனித்தம்பி மோகனராஜா 1983 ஆம் ஆண்டு நீர்ப்பாசனத் திணைக்களத்தில் நீர்ப்பாசனப் பொறியியலாளராக இணைந்து கொண்டார்.

அதன்பின்னர், மட்டக்களப்பு பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் காரியாலயத்திலும், கல்லோயா இடதுகரை வாய்க்கால் புனருத்தாபனத் திட்டக் காரியாலயத்திலும், களுவாஞ்சிக்குடி நீர்ப்பாசனப் பொறியியலாளர் காரியாலயத்திலும் கடமையாற்றி 1987 ஆம் ஆண்டு கிரிந்தி ஓயா நீர்ப்பாசன மற்றும் குடியேற்றத்திட்டத்தில் நீர்ப்பாசனப் பொறியியலாளராகவும் வதிவிட பொறியியலாளராகவும் கடமையாற்றினார்.

2012 ஆம் ஆண்டு மட்டக்களப்பு நீர்ப்பாசனப் பணிப்பாளராக தரமுயர்த்தப்பட்ட இவர், 2015 ஒக்டோபர், கொழும்பு பிரதான காரியாலத்திற்கு நீர் முகாமைத்துவத்திற்கும் பயிற்சிக்குமான நீர்ப்பாசனப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றார்.

அதன்பின்னர் 2017 ஆம் ஆண்டு நீர்ப்பாசன நீர் முகாமைத்துவ அமைச்சிற்கு மேலதிக செயலாளராக பதவியுயர்த்தப்பட்டு தற்போது நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 37 ஆவது நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)