Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குடாநாட்டில் தொடர்ச்சியான மழை- பாலாவி நலன்புரி நிலைய மக்கள் இடம்பெயர்வு

In இலங்கை
Published: 11:41 GMT, Nov 8, 2017 |
0 Comments
1362
This post was written by : Elakkiya

யாழ். குடாநாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக  பெய்துவரும் அடைமழை காரணமாக வல்வெட்டித்துறை பொலிகண்டி பாலாவி நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த குடும்பங்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த 17குடும்பங்களை சேர்ந்த 67பேர் இவ்வாறு இடம்பெயர்ந்து அருகில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுக்கான சமைத்த உணவினை பருத்தித்துறை பிரதேச செயலகத்தினர் வழங்கிவருகின்றனர்.

1990ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக பலாலியில் இருந்து இடம்பெயர்ந்து கடந்த 27 ஆண்டுகளாக பொலிகண்டி பாலாவி நலன்புரி நிலையத்தில் இவர்கள் வசித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg