துருக்கியில் கொதிகலன் வெடிப்பு : 5 பேர் உயிரிழப்பு
In
Updated: 13:45 GMT, Nov 8, 2017 | Published: 12:25 GMT, Nov 8, 2017 |
0 Comments
1215
This post was written by : Suganthini

வடமேற்குத் துருக்கியில் அமைந்துள்ள வர்ணப்பூச்சுத் தொழிற்சாலையொன்றில் இன்று (புதன்கிழமை) கொதிகலன் வெடித்துச் சிதறியதால் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து, மேற்படி தொழிற்சாலையின் கூரைக்குச் சேதமேற்பட்டுள்ளதுடன், தொழிற்சாலை வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ள நிலையில், மீட்புப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.