ட்ரம்ப்- ஸி ஜின்பிங் இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பம்
சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான இந்த பேச்சுவார்த்தையின் போது வர்த்தக பற்றாக்குறை தொடர்பில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முதற்தடவையாக ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்கான விஜயத்தை தொடர்ந்து தற்போது, சீனாவுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், வடகொரியாவின் அணுசக்தி இலக்குகளை கையாள்வதற்கு சீனாவின் ஒத்துழைப்பை அவர் எதிர்பார்த்துள்ளார்.
வடகொரியாவின் பிரதான நட்புநாடாக விளங்கும் சீனா மேலதிக அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகின்ற போதிலும் இதுவரையான அழுத்தங்களே போதுமானது என சீனா கூறுகின்றது.இந்நிலையில் சீன ஜனாதிபதியுடனான சந்திப்பை தொடர்ந்து வர்த்தகத் தலைவர்களை சந்திக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பின்னர் மாநில விருந்தில் கலந்துகொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.