Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சொந்த மண்ணிலேயே திண்டாடிய இலங்கை இந்தியா மண்ணில் என்ன செய்யப் போகிறது?

In கிாிக்கட்
Updated: 05:42 GMT, Nov 9, 2017 | Published: 05:42 GMT, Nov 9, 2017 |
0 Comments
1733
This post was written by : Anojkiyan

சொந்த மண்ணிலேயே இந்தியாவை வீழ்த்த முடியாத இலங்கையால், இந்திய மண்ணில் வைத்து அதனை எதிர்கொள்ள முடியாது என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் டேவ் வொட்மோர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கை அணிக்கு இந்த தொடர் மிகவும் நெருக்கடி மிக்கதாக அமையும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பில் மிகச்சிறந்த நிலையில் உள்ள இந்திய அணி, இந்த தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சொந்த மண்ணில் இந்திய அணியிடம் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து இலங்கை அணி கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலங்கை அணி, இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg