Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனமுடைந்து போயுள்ள ரொனால்டோ: மனம்திறந்த அணித் தலைவர்

In உதைப்பந்தாட்டம்
Updated: 07:26 GMT, Nov 9, 2017 | Published: 07:26 GMT, Nov 9, 2017 |
0 Comments
1245
This post was written by : Anojkiyan

2017-18 லா லிகா பருவகால கால்பந்து தொடரில், ரியல் மெட்ரிட் அணிக்காக விளையாடிவரும் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கோல் அடிக்க முடியாமல் மனமுடைந்து போயுள்ளதாக அணித்தலைவர் செர்ஜியோ ரமோஸ் கூறியுள்ளார்.

இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள ரியல் மெட்ரிட் அணி, 3வது இடத்தில் உள்ளது. இதேவேளை கடைசி மூன்று போட்டிகளில் அவர் கோல்களே அடிக்கவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து ரமோஸ் கூறுகையில், “ரொனால்டோ மற்றும் கரிம் பென்சிமாவின் கோல்கள் விரைவில் வரும். பென்சிமா இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார். ஆனால் ரொனால்டோ கோல் அடிக்காவிடில் மிகவும் மனமுடைந்து போவார். ஆனால் இவர்கள் கோல்கள் அடிக்காதது பற்றி நாங்கள் கவலையடையவில்லை” என கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg