Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட. கொரியா தொடா்பில் அமெரிக்க – சீன தலைவா்கள் முக்கிய தீா்மானம்

In உலகம்
Updated: 07:18 GMT, Nov 9, 2017 | Published: 07:18 GMT, Nov 9, 2017 |
0 Comments
1202
This post was written by : JudeDanish

கொரிய தீபகற்ப அணுவாயுதப் பதட்டம் மற்றும் இரண்டு  நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகள் தொடர்பிர் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் வட. கொரியா தொடா்பில் முக்கிய சில தீா்மானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் அவரது பாரியார் மெலேனியா ட்ரம்ப் ஆகியோருக்கு அரச வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேற்றைய தினம் சீனாவைச் சென்றடைந்த ஜனாதிபதி ட்ரம்ப் தம்பதியனருக்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், தம்பதியினர் சீனாவின் அரச பாரம்பரிய முறைப்படி செங்கம்பள வரவேற்பு அளித்துள்ளனர்.

சீனத் தலைநகர் பீஜிங்ஙில் இன்று காலை அரச வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.  இராணுவ பாண்ட் வாத்திய குழுவினால் அமெரிக்க மற்றும் சீன தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு கௌரவம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 21 பிரங்கி குண்டுகள் முழங்கப்பட்டன.

மேலும் இராணுவத்தின் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அத்துடன் சிறுவர்கள் இரண்டு நாட்டுக் கொடிகளையும் கைகளில் ஏந்தியவாறு உற்சாகமாக வரவேற்பினையும் அளித்திருந்தனர்.  அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ட்ரம்பின், சீனாவிற்கான முதல் விஜயம் இதுவாகும். மேலும் கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள போர் பதட்ட சூழ்நிலையில் ட்ரம்பின் சீன விஜயம் சர்வதேச அவதானத்தைப் பெற்றுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg