Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொலம்பியாவில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒன்பதுபேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 08:25 GMT, Nov 9, 2017 | Published: 08:25 GMT, Nov 9, 2017 |
0 Comments
1229
This post was written by : Elakkiya

தென்கிழக்கு கொலம்பியாவில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒன்பதுபேர் உயிரிழநதுள்ளதுடன் 19 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கவ்கா மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக கொரின்ரோ தென்கிழக்கு நகராட்சிக்கு அருகில் அமைந்துள்ள லா பைலா நதி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அணைக்கட்டை உடைத்து பெருக்கெடுக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக கொர்னிடோ நகரில் பொதுமக்கள் வசிப்பிடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கொர்னிடோ மேயர் எட்வர்ட் பெர்ணான்டோ கார்சியா, நகராட்சியில் ஆறு தொகுதிகளைச் சேர்ந்த 32 ஆயிரம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நகரங்களில் குறைந்த பட்சம் 37 வீடுகள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேரழிவு இடங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் கனரக இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg