Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொண்டமானுக்கு ஆதரவாக மலையகத்தில் தொடா்ந்தும் போராட்டம்!

In இலங்கை
Updated: 08:01 GMT, Nov 9, 2017 | Published: 08:01 GMT, Nov 9, 2017 |
0 Comments
1274
This post was written by : Puvanes

ஹட்டன் நோர்வூட் எலிபடை தோட்ட மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

ஹட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையமானது பூல்பேங் தொழில் பயிற்சி நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 200 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டு தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன்போது, மலையக மக்களின் ஏகோபித்த தலைவராக ஏற்றுக்கொண்ட சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரால் உருவாக்கப்பட்ட ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரை இன்றைய புதிய அரசியல்வாதிகள் மாற்றியமை எமக்கு ஏனைய சமூகத்தினரிடம் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மீண்டும் தொண்டமானின் பெயர் சூட்டப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கையினை முன்வைத்தனர்.

இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரை ஹட்டன் தொண்டமான் தொழிற்பயற்சி நிலையத்திலிருந்து நீக்கியமை தொடர்பில் பல்வேறு மட்டத்திலிருந்தும் எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

hatton002 hatton004 hatton005

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg