Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய இளவரசர் மோடியுடன் சந்திப்பு

In
Updated: 08:40 GMT, Nov 9, 2017 | Published: 08:40 GMT, Nov 9, 2017 |
0 Comments
1119
icon_com
This post was written by : Elakkiya
camila

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது பாரியார் கமில்லா ஆகியோர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

புது டெல்லியில் நேற்று (புதன்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள இளவரசர் சார்ள்ஸ், இருநாடுகளுக்குமிடையிலான உறவை வலுப்படுத்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.

இளவரசர் சார்ள்ஸிற்கும் பிரதமர் மோடிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரித்தானியாவில் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாடு மற்றும் காலநிலை மாற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இந்தியா, பிரித்தானியாவிற்கிடையில் சுமார் 12.9 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகம் நிலவிவருகின்ற அதேவேளை பிரித்தானியாவில் அதிக முதலீடுகள் செய்துள்ள நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்திலும், தொழிலாளர்களின் எண்ணிக்கையில் இரண்டாம் இடத்திலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg