பும்ராவின் திறமைக்கு கிடைத்த பரிசு!

சர்வதேச கிரிக்கெட் சபையின், ரி-ருவென்ரி போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய அணியின் இளம் பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா முதலிடத்தை பிடித்துள்ளார்.
நியுசிலாந்து அணிக்கெதிரான ரி-ருவென்ரி தொடரில், அதிசிறப்பாக பந்து வீசியதன் மூலம் அவர் தொடர்ந்தும் 724 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இமாட் வசிம், 719 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ராஷித் கான் 717 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இதனைதொடர்ந்து மேற்கிந்திய தீவுகளின் சமுவேல் பத்ரி 694 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், தென்னாபிரிக்காவின் இம்ரான் தஹிர் 691 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் நீடிக்கின்றனர்.
இதேவேளை ரி-ருவென்ரி போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில், இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி 824 தரவரிசைப் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.