Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பார்சிலோனா மற்றும் ஜிரோனாவில் ரயில் மறியல் போராட்டம்

In ஐரோப்பா
Published: 09:22 GMT, Nov 9, 2017 |
0 Comments
1117
icon_com
This post was written by : Elakkiya

சிறையிலுள்ள கத்தலோனிய அரசியல் தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஸ்பெய்னின் பார்சிலோனா மற்றும் ஜிரோனா  ஆகிய இடங்களில் அதிவேக ரயில் பாதைகளை மறித்து நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

கத்தலோனியாவின் சார்பு சுதந்திர பிரசாரகர்களால் நேற்றைய தினம் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவான மாணவர்கள் ஒன்றுகூடி மேற்படி ரயில் மறியல் போராட்டத்தை மேற்கொண்டனர். இதன் காரணமாக பார்சிலோனாவின் சான்ட்ஸ் ரயில் நிலையத்தில் சுமார் 5 மணிநேரம் ரயில் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்தது.

வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் பெருமளவானோர் பணிகளுக்கு சென்றதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக நேற்றைய தினம் சற்று பதட்டமான சூழல் ஏற்பட்டதாக தெரியவருகின்றது.

மேலும், ஒருசில கடைகள் மூடப்பட்டு போக்குவரத்து சேவைகளும் சில இடைநிறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கத்தலோனியாவின் தலைவர் முன்னாள் தலைவர் கார்லஸ் பூகிமொன்ட்டின் பெயரை குறிப்பிட்டு அவரே தமது ஜனாதிபதி என்று கோஷமெழுப்பினர்.

கத்தலோனிய நாடாளுமன்றம் ஒருதலைபட்சமாக சுதந்திரபிரகடனத்தை நிறைவேற்றியதை தொடர்ந்து பதவிநீக்கம் செய்யப்பட்ட கத்தலோனியா அமைச்சர்கள் தேசத்துரோக குற்றச்சாட்டுக்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)