Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கமல்ஹாசனை வம்புக்கு இழுக்கிறாரா வெங்கட் பிரபு?

In சினிமா
Updated: 13:26 GMT, Nov 9, 2017 | Published: 13:26 GMT, Nov 9, 2017 |
0 Comments
1525
This post was written by : Varothayan

வெங்கட் பிரபுவின் ப்ளெக் டிக்கெட் கம்பனி சார்பில் தயாராகியுள்ள படம் ஆர்.கே.நகர். இந்தப்படத்தில் வைபவ் ஹீரோவாக நடிக்கின்றார். வெங்கட் பிரபுவின் உதவியாளர் சரவண ராஜன் படத்தை இயக்கியுள்ளார்.

இதன் டீஸர் சமீபத்தில் வெளிவந்தது. அதன் இறுதியில், நடிகர் சம்பத் கமெராவைப் பார்த்து, ‘நடிகனா இருந்தா உனக்கு ஓட்டு போட்டிடுவாங்களா? எம்.ஜி.ஆர் ஆ நீ?’ என கேள்வி கேட்பதைப் போல அமைந்துள்ளது.

அண்மையில், நடிகர் கமல்ஹாசன் தேர்தல் அரசியலுக்குள் நுழைவதற்கான அறிவிப்புக்கள் அடுத்தடுத்து அவரது நடவடிக்கைகள் மூலம் ஊர்ஜிதமாகியுள்ள நிலையில், இந்த காட்சியை அப்படத்தில் அமைத்ததன் மூலம், வெங்கட் பிரபு கமலை வம்புக்கு இழுக்கின்றாரா? என எண்ணத் தோன்றுகிறது.

இந்த டீஸர் வெளியான பின்னர், பலரும் இவ்விடத்தை தெரிவித்து ருவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். ‘படத்தை பார்த்துவிட்டு பேசுங்கள்’ என வெங்கட் பிரபுவும் பதிலுக்கு பதிவிட்டுள்ளார்.

நடிகர், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தந்தையார் கங்கை அமரன் பா.ஜ.க.வின் முக்கிய உறுப்பினர் என்பதுடன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக அவர் களமிறக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினி ஸ்டைலில் சொல்வதானால், ‘கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் கணக்குச் சரியாக வருகிறது’.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg