Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவின் மற்றுமொரு அமைச்சர் ராஜினாமா

In
Published: 09:41 GMT, Nov 9, 2017 |
0 Comments
1222
icon_com
This post was written by : Elakkiya

பிரித்தானியாவின் மற்றுமொரு அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இஸ்ரேலுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் பிரித்தானியானியாவின் சர்வதேச அபிவிருத்தி செயலாளர் பிரீத்தி பட்டேல் நேற்று (புதன்கிழமை) பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் தனிப்பட்ட தேவைக்காக குடும்பத்தினருடன் இஸ்ரேல் சென்றிருந்த பிரித்தி பட்டேல் அந்நாட்டின் பிரதமர் பென்சமின் நெதன்யாகு உள்ளிட்ட இஸ்ரேலிய உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்திருந்தார்.

இது தொடர்பில் பல்வேறு கண்டனங்கள் வெளியிடப்பட்ட நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை பிரீத்தி பட்டேல் நேற்றையதினம் சமர்பித்துள்ளார்.  பிரதமர் தெரேசா மேயுடனான சந்திப்பை தொடர்ந்து பிரீத்தி பட்டேலின் ராஜினாமா கடிதத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இவ்வாறிருக்க பட்டேலின் முடிவு சரியானதே என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்களில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் மைக்கேல் ஃபலோன் கடந்த வாரம் ராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg