Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் வழக்கினை ஒத்திவைத்தார் இளஞ்செழியன்!

In இலங்கை
Updated: 12:44 GMT, Nov 9, 2017 | Published: 10:28 GMT, Nov 9, 2017 |
0 Comments
1161
icon_com
This post was written by : Puvanes
missing001

1996 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 12 இளைஞர்களின் ஆட்கொணர்வு மனு இன்றைய தினம் (வியாழக்கிழமை) யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், அவர்களில் மூவர் தொடர்பில் புதிய ஆட்கொணர்வு மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது புதிதாக தாக்கல் செய்யப்பட்ட 3 ஆட்கொணர்வு மனு வழக்கினை எதிர்வரும் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென கூறி யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ஒத்திவைத்துள்ளார்.

1996 ஆம் ஆண்டு யூலை மாதம் 19 ஆம் திகதி நாவற்குழி மறவன்புலோவைச் சேர்ந்த 24 இளைஞர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு நாவற்குழி வில் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 12 இளைஞர்களின் வழக்கு  யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

12 நபர்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 9 நபர்களின் வழக்குகள் ஏற்கனவே 2002 ஆம் ஆண்டு யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் ஆரம்ப கட்ட வழக்கு விசாரணைகள் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டு, சாவகச்சேரி நீதிமன்றினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

குறித்த வழக்கு சாவகச்சேரி நீதிமன்றில் நடைபெற்ற போது, சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்டு, பின்னர் யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து மேற்படி வழக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெறக்கூடாது என்பதற்காக அப்போதைய இராணுவத்தளபதி 2003 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.

2003 ஆம் ஆண்டு மாற்றப்பட்ட வழக்கு 2017 ஆம் ஆண்டு வரை தமது உறவுகளைத் தொலைத்தவர்களுக்கு வழக்குத் தொடர்பான விடயங்கள் எதுவும் தெரியாது இருந்தது.

இந்த நிலையில், 2002 ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்யாத மூவர் தொடர்பில் இன்றைய தினம் புதிதாக ஆட்கொணர்வு மனு இராணுவத்தினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களின் உறவினர்களில் மூவர் தாக்கல் செய்தனர்.

இதன்போது, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், கொழும்பு மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பினைச் சுட்டிக்காட்டி, அந்த வழக்கின் தொடர்ச்சியாக அநுராதபுரம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பட்சத்தில் மீள தன்னால் விசாரிக்க இயலாத நிலையைச் சட்டத்தரணிகளுக்கு சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், அநுராதபுரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றதா, அவ்வாறு நிலுவையில் இருந்தால், அந்த வழக்கினை யாழ். மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆலோசிப்பதாகவும் இளஞ்செழியன் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அநுராதபுர நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை யாழ். மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவது தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு மனு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதற்குரிய செயற்பாடுகளை சட்டத்தரணிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)