Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்

In உலகம்
Published: 10:52 GMT, Nov 9, 2017 |
0 Comments
1150
icon_com
This post was written by : Elakkiya

பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் பாகிஸ்தான்  மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். பலூசிஸ்தானின் தென்மேற்கு பிராந்தியத்தில் இன்று (வியாழக்கிழமை) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் மேலதிக பொலிஸ் கண்காணிப்பாளர் ஜெனரல் ஹமித் ஷகீல் என்பவருடன் அவருடைய வாகன சாரதியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மேலும் மூவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானின் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு முதல் பலூசிஸ்தானில் இடம்பெறும் தொடர்ச்சியாக தாக்குதல்களால் இதுவரை 180 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்லாமிய அரசுடன் இணைந்த கிளர்ச்சியாளர்களில் பிரசன்னம் பெரும் கவலையை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg