Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியா- பங்களாதேஷ் உறவை ரயில் சேவை பலப்படுத்துகிறது: பிரதமர் மோடி!

In இந்தியா
Updated: 11:15 GMT, Nov 9, 2017 | Published: 11:15 GMT, Nov 9, 2017 |
0 Comments
1372
This post was written by : Kemasiya

இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய,  இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் பலப்படுத்தப் பட்டுள்ளதாக,  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கொல்கத்தா மற்றும் பங்களாதேஷின் குல்னா ஆகிய இரு நகரங்களை இணைக்கும்,  “பந்தான் எக்ஸ்பிரஸ்” ரயில் சேவையினை,  இன்று (வியாழக்கிழமை) காணொளி மூலம் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே,  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த பிரதமர்,

“இந்த ரயில் சேவையினூடாக,  இரு நாட்டின் எல்லையோரங்களிலும் இருக்கும் மக்கள் பயன்பெறுவார்கள். அவர்களின் கனவை நிறைவேற்றுவது போல்,  இத்திட்டம் அமையப்பெற்றுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

மேலும் இந் நிகழ்வில்,  பிரதமர் மோடி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்காள முதல்வர் ம்ம்தா பானர்ஜி,  ஆகியோர் இணைந்து குறித்த ரயில் சேவையை,  வீடியொ காணொளி மூலம் திறந்து வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg