Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உச்சத்தை எட்டும் மருத்துவச் செலவீனம்: தள்ளாடும் கனேடிய அரசு

In கனடா
Published: 12:58 GMT, Nov 9, 2017 |
0 Comments
1179
icon_com
This post was written by : Anojkiyan
canda

கனடாவில் இந்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் சுகாதார மருத்துவச் செலவீனம் 242 பில்லியன் டொலர்களை எட்டும் என கனேடிய சுகாதார தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கனேடிய சுகாதார தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

நாட்டில் ஒருவருக்கு தலா 6,604டொலர்கள் என்ற அளவில் இந்த செலவீனம் காணப்படுவதாகவும், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒருவருக்கு 200 டொலர்களால் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சுகாதார மருத்துவச் செலவீனம் சுமார் நான்கு சதவீத அதிகரிப்பைக் கண்டுள்ளதாகவும், இந்த செலவீனமானது கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.5 சதவீதம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த மருத்துவ செலவீனம் இந்த ஆண்டில் 242 பில்லியன் டொலர்களை எட்டவுள்ள நிலையில், அவற்றில் அதிக அளவாக 28.3 சதவீதம் மருத்துவமனைக்கான செலவீனங்களாக காணப்படுவதுடன், 16.4 சதவீதம் மருந்துப் பொருட்களுக்கும், 15.4 சதவீதம் மருத்துவர்களுக்கும் செலவிடப்படுவதாகவும அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)