Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆலய கொடிமரத்தில் பொதிந்துள்ள அறிவியல் ரீதியான உண்மைகள்!

In ஆன்மீகம்
Updated: 13:15 GMT, Nov 9, 2017 | Published: 13:15 GMT, Nov 9, 2017 |
0 Comments
1389
This post was written by : Vithushagan

இந்துக்கள் குடியிருக்கும் ஒவ்வொரு இடத்திலும் ஆகம முறைப்படி இந்த ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆலயம் மனிதன் மேற்கே தலை வைத்து கிழக்கே கால் நீட்டி மல்லாந்து படுத்தி ருப்பதுபோல் கட்டப்படுகிறது. ஆலயத்தின் கர்ப்பக்கிகம் முகமாகவும், அர்த்த மண்டபம் கழுத்தாகவும், இருதோள்கள் துவார பாலகர் நிற்கு மிடமாகவும், கொடி மரம் வரையுள்ள பாகம் உடம்பாகவும், கொடிமரம் முதுகுத்தண்டாகவு ம், பாதங்கள் வாயிற் கோபுரமாகவும் இருக்கி ன்றன.

ஆலயங்களில் இந்த கொடிமரம் கருவறைக்கு நேராகத்தான் நடப்பட்டிருக்கும். கொடிகம்பத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமியில் இருக்கும்படி நடுவர். சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களிலிருந்து கொடி மரம் செய்யப்படுகின்றது.

விண்ணில் இருந்துவரும் மின்னூட்டம்பெற்ற பிரபஞ்ச கதிர்களை கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் ஈர்த்து கருவறையில் இருக்கும் மூலவ‌ர்மீது பாய்ச்சும். இந்த சக்தியானது கருவறைக்கு இருபுறம் இருந்து கடவுளை வணங்கும் பக்தர்கள் மீது பாயும். இந்த பிரபஞ்ச சக்தியை உள்ளவாறு ஏற்றுக் கொள்ளும் தன்மை சாதாரண மானுடர்களுக்கு இல்லை.

இந்த கொடிமரமானது இந்த பிரபஞ்ச சக்தியை ஈர்த்து, பக்தர்களின் உடல் ஏற்றுக் கொள்ளும் தன்மைக்கு இந்த சக்தியைமாற்றி இருபுறம் பாய்ச்சும். கொடிமரம் இல்லை என்றால் இந்த அதீத சக்தியின் தன்மையை மானுடர்கள் ஏற்றுக் கொள்வது கடினம். இதற்காகத்தான் கொடிமரம் கோயில்களில் உள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg