Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி முடிவு: வீணையில் களம் இறங்குகிறது!

In இலங்கை
Updated: 13:14 GMT, Nov 9, 2017 | Published: 13:11 GMT, Nov 9, 2017 |
0 Comments
1180
icon_com
This post was written by : Puvanes
epdp001

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக யாழ். மாவட்ட இணை செயலாளர்களான சிவகுரு பாலகிருஷ்ணன், மற்றும் ஜயாத்துரை ஸ்ரீ ரங்கேஷ்வரன் ஆகியோர் கூறி
யுள்ளனர்.

சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) காலை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் சிவகுரு பாலகிருஷ்ணன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி சபை தேர்தலில் ஈ.பி.டி.பி தனித்து நின்று வீணை சின்னத்தில் போட்டியிட உள்ளது. 1998ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10 சபைகள் பெற்றோம். பின்னர் ஐக்கிய முன்னணியுடன் கூட்டு சேர்ந்து இணக்க அரசியலில் போட்டியிட்டோம்.

 இன்றைய சூழ்நிலையில் நாம் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளோம்.

உலகில் பெரும் மோசடியான மத்திய வங்கி மோசடியில் ஈடுபட்ட நல்லாட்சி எனக் கூறப்படும் அரசாங்கத்தோடு கூட்டு சேர விரும்பவில்லை. அதனாலேயே தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளோம். என்றாலும் கூட மத்தியில் கூட்டாச்சி, மாநிலத்தில் சுய ஆட்சி எனும் கொள்கையில் மாற்றமில்லை.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டமானது தோல்வி அல்லது எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை.

இதனால் அரசியல் கைதிகளின் கோரிக்கை வெற்றியடையவில்லை. அதற்கு காரணம் அரசுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் அரசியல்வாதிகளின் பாராமுகம் ஆகும். நல்லாட்சி அரசுடன் இணைந்து செயற்படும் தமிழ் அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் காத்திரமான நடவடிக்கையினை எடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)