Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தெலுங்கிலும் களமிறங்கிய விஜய்!

In சினிமா
Published: 13:46 GMT, Nov 9, 2017 |
0 Comments
1261
icon_com
This post was written by : Vithushagan
1508155453-3815

விஜய்யின் மெர்சல் படத்தின் தெலுங்குப் பதிப்பான அதிரிந்தி திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பிரமாண்டமாக இன்று(வியாழக்கிழமை) வெளியாகியுள்ளது.

தமிழில் கடந்த தீபாவளியன்று வெளியாகி வசூல் சாதனைப் படைத்த மெர்சல் படம், தெலுங்கில் அதிரிந்தி என மொழிமாற்றப்பட்டது. இந்தப் படத்தை தீபாவளிக்கு அடுத்த வாரம் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர், ஆனால் சென்சார் பிரச்சினையால் படம் வெளியாகவில்லை.

இந்நிலையில், குறித்த படம் இன்று ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அதிரிந்தி படம் வெளியானது. இரு மாநிலங்களிலும் 500க்கும் மேற்பட்ட அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

தமிழில் சர்ச்சைகளைக் கிளப்பிய காட்சிகள் அனைத்துக்கும் ஆந்திராவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக மருத்துமனையில் நடக்கும் முறைகேடுகள் குறித்த காட்சிகள், வசனங்களை மக்கள் அதிகமாக ரசிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிரிந்தி படம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 25 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)