Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தினகரனின் பண்ணை வீட்டில் இரண்டு பாதாள அறைகள் கண்டுபிடிப்பு

In இந்தியா
Published: 04:22 GMT, Nov 10, 2017 |
0 Comments
2444
This post was written by : Kemasiya
dinakaran

வருமான வரித்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, டி.டி.வி.தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இருந்து இரண்டு பாதாள அறைகள் கண்டுபிடிக்க பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஜெயா தொலைக்காட்சி உட்பட, தினகரன் வீடு மற்றும் சசிகலாவின் உறவினர்கள் வீடு உள்ளடங்களாக பல முக்கியஸ்தர்களின் வீடுகளை வருமான வரித்துறையினர் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) முற்றுகையிட்டதில், தினகரனின் பண்ணை வீட்டில் இருந்து இரண்டு நவீன வசதிகள் கொண்ட பாதாள அறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பண்ணை வீட்டின் சோதனை, நேற்றைய தினம் மதியம் ஆரம்பிக்கப்பட்டு, இன்று அதிகாலை 4 மணிக்கு நிறைவுக்கு வந்தது. இதன் போது, இரு அறைகளையும் திறக்க முடியாத அளவிற்கு தொழில்நுட்பம் பயன்படுத்த பட்டிருந்ததாகவும், அதன் பின்னர் மாலை வேளையில், கதவுகளை திறந்த அதிகாரிகள், பதுக்கி வைத்திருந்த பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg