Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் ட்ரம்ப் உரை

In உலகம்
Updated: 04:58 GMT, Nov 10, 2017 | Published: 04:58 GMT, Nov 10, 2017 |
0 Comments
1311
This post was written by : Risha

வியட்நாமில் நடைபெறவுள்ள வருடாந்த ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் உரையாற்றவுள்ளனர்.

இதன்போது, சீனா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான வர்த்தக ஏற்றத்தாழ்வை சீர்செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

சீனாவிற்கு இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ட்ரம்ப், ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) சீனாவிலிலிருந்து வியட்நாமிற்கு புறப்பட்டுள்ளார்.

சீனாவில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது கருத்து தெரிவித்த ட்ரம்ப், வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுத சோதனைகளை, சீனாவினால் இலகுவாக கட்டுப்படுத்தலாம்.

வடகொரியாவுடனான பொருளாதார உறவுகளை கட்டுப்படுத்துவதன் மூலமும், ரஷ்யாவின் உதவியுடனும் வடகொரிய நெருக்கடிக்கு சீனா தீர்வை பெற்றுக் கொடுக்கலாம் என்றும் வலியுறுத்தினார்.

ட்ரம்ப், ஆசியாவில் ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகின்ற நிலையில், வியட்நாமிற்கான விஜயமானது, அவரது பயணத்தின் நான்காவது நிறுத்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg