Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஷ்மீர் பகுதியில் தீவிரவாதி ஒருவர் கைது!

In இந்தியா
Published: 04:47 GMT, Nov 10, 2017 |
0 Comments
1178
icon_com
This post was written by : Kemasiya

மோதல்கள் நீடித்து வரும் காஷ்மீர் மாநிலத்தின், கல்காம் மாவட்டத்தில் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் தீவிரவாதியொருவர் பதுங்கியிருப்பதாக, பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த, ஷோக்காட் அஹ்மத் லோன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் அப்பகுதியில் உள்ள, பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ள முற்பட்ட போதே கைதுசெய்ய பட்டுள்ளதாகவும், இவரிடம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் நான்கு வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg