Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வரவு செலவுத் திட்டம் அழகான கதை: மஹிந்த

In இலங்கை
Published: 04:47 GMT, Nov 10, 2017 |
0 Comments
1258
icon_com
This post was written by : Ravivarman

2018 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதியும், குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்று நாடாளுமன்றில் சமர்பித்த வரவு செலவுத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தன்னுடைய ஆட்சியின் போது அறவிடப்பட்ட வரியை விட தற்போதைய கூடுதல் வரியை அறிவிடுவதாகவும், ஆனால் ஒருசில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து விட்டு தம்பட்டம் அடிப்பதாகவும் தெரிவித்தார்.

வரவு செலவுத்திட்டத்தில் சுவாரஸ்யமான கதைகள் கூறப்பட்டிருந்தாலும், அவை முன்பு குறிப்பிட்டது போல் நடைமுறைக்கு வராது எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை கூட்டு எதிரணி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் வருகைதந்தமை எதற்காக என மஹிந்தவிடம் சூழ்ந்திருந்த ஊடகவியலாளர் வினவினர்.

இதற்கு பதிலளித்த அவர், எரிபொருள் தட்டுப்பாட்டை எடுத்துரைக்கும் முகமாகவே சைக்கிளில் வந்து எதிர்ப்பை வெளியிட்டதாக கூறினார்.

தனது ஆட்சியில் எரிபொருள் பிரச்சினைக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட்டிருந்தாகவும், ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் சிறந்த நிர்வாகம் இல்லை எனவும், தலைவர் ஒருவர் இல்லை எனவும் அவர் கூறினார்.

தற்போதைய ஜனாதிபதி வேலையற்று இருப்பதால் கதைகளை மாத்திரமே கூறிகொண்டிருக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)