Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம்: மாநில அரசுடன் ஆலோசனை!

In இந்தியா
Updated: 05:21 GMT, Nov 10, 2017 | Published: 05:21 GMT, Nov 10, 2017 |
0 Comments
1434
This post was written by : Kemasiya

இரண்டாவது சென்னை விமான நிலையம் அமைப்பது குறித்து, மாநில அரசுடன் ஆலோசனை நடத்தப்படுவதாக,  விமான நிலைய ஆணையக தலைவர் குருபிரசாத் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே,  அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,

தற்போது ஒரு மணி நேரத்திற்கு 18 விமானங்களை கையாண்டு வருகின்றோம். ஆனால் எதிர்வரும் 2030 தொடங்கி  2035 ஆம் ஆண்டு காலப்பகுதியில்,  தற்போதைய பயணிகளின் பாவனையில் 12 சதவீதம் அதிகரிக்க கூடும்.

எனவே அதற்கு ஏற்ப  ஒரு மணி நேரத்தில் 40 விமானங்களை கையாள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மேலும் ஒரு சென்னை விமான நிலையத்தை அமைப்பதற்காக,  மாநில அரசுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக,  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg