Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயா T.V- தினகரன் வீடு ஆகியன இரண்டாவது நாளாகவும் முற்றுகை: வரித்துறையினரின் தீவிர சோதனை!

In இந்தியா
Published: 06:11 GMT, Nov 10, 2017 |
0 Comments
1521
This post was written by : Kemasiya
221

ஜெயா தொலைக்காட்சி மற்றும் தினகரன் வீடு உள்ளடங்கிய, சந்தேகம் ஏற்படும் மேலும் பல முக்கிய இடங்களில், இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டாவது நாளாகவும் சோதனை மேற்கொள்ளப்படுவதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் திடீர் சோதனைகளை மேற்கொண்ட பின்னர்,  ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அதிகாரிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிவித்திருந்த அவர்கள்,

தற்போது வரையில் கைப்பற்றியுள்ள ஆவணங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். கூடுதல் ஆவணங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட  இடங்களில்,  சிக்காத இடங்களை இரண்டாம் நாளாகவும் சோதனையிடவுள்ளோம்.

அதன்படி எம்.ஜி.ஆர் அலுவலகம்,  ஜெயா தொலைக்காட்சி,  தினகரன் வீடு ஆகியவை,  இரண்டாம் நாள் சோதனைக்கு உட்படுத்தப்டவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg