Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: ஒருவர் கைது!

In இலங்கை
Published: 06:12 GMT, Nov 10, 2017 |
0 Comments
1088
icon_com
This post was written by : Ravivarman

வவுனியாவில் சுமார் இரண்டு கிலோ 266 கிராம் கெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம். தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கிவரும், பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு நேற்றையதினம் (வியாழக்கிழமை) கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே பாரிய அளவிலான கெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மகிந்த வில்வ ஆராச்சி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள வல்வெட்டித்துறையை சேர்ந்த 53 வயதுடைய குறித்த நபர் யாழ்ப்பாணத்திலிருந்து கெரோயினை கொழும்புக்கு கொண்டு செல்லும் நோக்கில் பேரூந்தில் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் மூன்று கோடி ரூபாவிற்கும் அதிகமானது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

IMG_8729 IMG_8720

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)