Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில் பிரான்ஸ் ஜனாதிபதி சவுதிக்கு விஜயம்

In உலகம்
Updated: 06:15 GMT, Nov 10, 2017 | Published: 06:15 GMT, Nov 10, 2017 |
0 Comments
1585
This post was written by : Risha

சவுதி அரேபியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன், சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் ரியாத்தில் அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஈரான், லெபனான் மற்றும் யேமனுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் நேற்றைய அவசர பேச்சுவார்த்தை ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

இதன்போது அங்கு கருத்து தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி, பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுதல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுதல் ஆகிய காரணங்களுக்காக சவுதி அரேபியாவுடன் இணைந்து பணியாற்றுவது முக்கியம் என இமானுவெல் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.

போரினால் சீரழிக்கப்பட்டுள்ள யேமனுக்கான நிவாரணங்களை கொண்டுசெல்வதற்கான மார்க்கங்கள் அனைத்தையும் சவுதி மூடியுள்ள நிலையில், யேமன் நெருக்கடி தொடர்பிலும் மக்ரோன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg