Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லெபனானிலிருந்து வெளியேறுமாறு சவுதி- குவைத் வலியுறுத்தல்

In உலகம்
Updated: 06:51 GMT, Nov 10, 2017 | Published: 06:51 GMT, Nov 10, 2017 |
0 Comments
2986
This post was written by : Risha

லெபனானிற்கான விஜயத்தை தவிர்த்துக் கொள்ளுமாறு சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது.

அதேவேளை, லெபனானில் உள்ள தமது பிரஜைகளை உடனடியாக நாடு திரும்புமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சை மேற்கோள்காட்டி சவுதி அரேபிய உத்தியோகப்பூர்வ செய்தி நிறுவனமொன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.
லெபனான் குடியரசின் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக, அங்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டுள்ளவர்களையும், வசித்துள்ளவர்களையும் விரைவில் வெளியேறுமாறு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை, வேறெந்த சர்வதேச நாடுகளிலிருந்தும் லெபனானுக்கு பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சவுதியின் அறிவிப்பு வெளியான ஓரிரு மணித்தியாலங்களில், குவைட் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியமும், குறித்த அறிவுறுத்தலை தமது பிரஜைகளுக்கு விடுத்துள்ளது.

சவுதிக்கான விஜயத்தை தொடர்ந்து தனது திடீர் பதவி விலகல் குறித்து லெபனான் பிரதமர் சாட் அல்-ஹரிரி அறிவித்ததையடுத்தே சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் குவைட் ஆகிய நாடுகளின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg