Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாராலும் என்னை வீழ்த்த முடியாது: மேரிகோம்

In விளையாட்டு
Updated: 06:43 GMT, Nov 10, 2017 | Published: 06:40 GMT, Nov 10, 2017 |
0 Comments
1097
icon_com
This post was written by : Elakkiya

முழுமையான உடற்தகுதியுடன் இருக்கும்போது யாராலும் தன்னை வீழ்த்தமுடியாது என இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார்.

வியட்நாமில் நடைபெற்ற 8 ஆவது ஆசிய பெண்கள் குத்துச்சண்டைப் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் ஐந்தாவது முறையாகவும் சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற மேரிகொம் தனது வெற்றி குறித்து நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘நீண்ட நாட்களாக கடினமான பயிற்சிகளை மேற்கொள்கின்றேன். முழு உடல் தகுதியுடன் நான் இருக்கும் போது என்னால் யாரையும் வீழ்த்த முடியும். இதேபோன்ற உயரிய உடல் தகுதியை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொண்டால் என்னை யாரும் நெருங்க முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 48 கிலோ உடல் எடைப்பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் என்று தெரிவித்த மேரிகொம், 2018 ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டியே தனது இலக்கு என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)