Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சவால்களை எதிர்கொள்ள தயார்: இலங்கை அணித்தலைவர்

In கிாிக்கட்
Updated: 07:11 GMT, Nov 10, 2017 | Published: 07:10 GMT, Nov 10, 2017 |
0 Comments
1307
This post was written by : Elakkiya

இந்திய அணியுடனான கிரிக்கட் தொடரில் சவால்களை எதிர்கொள்வதற்கு ஆவலுடன் இருப்பதாக இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அணி வீரர்கள் கடினமான பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் தொடர் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சந்திமால், ‘அண்மையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரில் நாம் வெற்றிபெற்றிருந்தோம். அந்த தொடரில் 6 துடுப்பாட்டவீரர்களும் 5 பந்து வீச்சாளர்களும் எமது அணியில் இடம்பெற்றிருந்தனர். ஆனால் இந்திய அணியுடனான தொடரில் ஐந்தாவது பந்து வீச்சாளருக்கு பதிலாக சகலதுறை ஆட்டவீரரை சேர்ப்பதற்கு ஆலோசிக்கின்றோம். ஆடுகளத்தை பார்த்த பின்னரே அதனை திட்டமிட முடியும். டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இந்த தொடர் எமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே தொடருக்காக எமது அணி வீரர்கள் முழுமையாக தயாராகின்றனர்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அண்மைக்காலமாக சுழல்பந்து வீச்சில் அபாரமாக செயற்படும் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவை சமாளிப்பதற்கு சில திட்டங்களை வகுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கட் அணி இந்திய மண்ணில் இதுவரை டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றது இல்லை. இதனால் இந்த தொடரின் வெற்றி இலங்கை அணியின் ஒவ்வொரு வீரர்களின் கனவாகவே அமையும். அதுமட்டுமல்ல தினேஷ் சந்திமாலின் முதலாவது இந்திய சுற்றுப்பயணமும் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் மூன்று போட்டிகளைக் கொண்ட ரி-ருவென்ரி தொடர் ஆகியன நடைபெறவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg