Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகத் தலைவர்களின் வருகை: வியட்நாமில் பாதுகாப்பு தீவிரம்

In உலகம்
Updated: 15:23 GMT, Nov 10, 2017 | Published: 07:07 GMT, Nov 10, 2017 |
0 Comments
1153
icon_com
This post was written by : Risha

ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக, உலக நாடுகளின் தலைவர்கள் வியட்நாமை வந்தடைந்துள்ள நிலையில், பிரதான துறைமுக நகரான டாநாங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் வியட்நாமை வந்தடைந்துள்ளனர்.

ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில், இம்முறை வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உலகத் தலைவர்கள் பங்குக்கொள்ளும் குறித்த மாநாடு இன்று, நாளை ஆகிய இரு தினங்களுக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg