Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரட்டை இலைச்சின்னத்தின் தீர்ப்பு சசிகலா பக்கமே: சுப்ரமணியசுவாமி உறுதி!

In இந்தியா
Updated: 07:13 GMT, Nov 10, 2017 | Published: 07:12 GMT, Nov 10, 2017 |
0 Comments
2736
This post was written by : Kemasiya

இரட்டை இலைச்சின்னம் சசிகலா தலைமையிலான அணிக்கு தான் கிடைக்கும் என, பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும்,  தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான,  சுப்ரமணியசுவாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் வைத்து,  நேற்றைய தினம் (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே,  அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்திருந்த அவர்,

“சின்னம் குறித்த தீர்ப்பு சசிகலா பக்கம் தான் தீரும். அத்துடன் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தது அரசியல் நாகரீகமாகும். நோய்வாய்ப்பட்டு யார் இருந்தாலும் அவர்களை சென்று பார்வையிடுவது வழமை தான்.

மேலும் வருமான வரித்துறையினர் ஒரு பக்கமாக சோதனை நடத்துவதானது,  மத்திய அரசின் செயற்பாடு ஒருதலைப்பட்சமானது என சிந்திக்க தூண்டிவிடும். எனவே அதிகாரிகளிடம் இது குறித்து பேசவுள்ளேன்.

சந்தேகம் உள்ள அனைவரிடமும் சோதனை நடத்துவது அவசியம் என்பதை வலியுறுத்தவுள்ளேன்.” என அவர் மேலும் தெரிவிவத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg