Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவும் சீனாவும் எதிரிகளாக அன்றி- பங்காளிகளாக திகழ வேண்டும்- சீன ஜனாதிபதி

In உலகம்
Published: 07:37 GMT, Nov 10, 2017 |
0 Comments
1155
icon_com
This post was written by : Risha

அமெரிக்காவும் சீனாவும் எதிரிகளாக அன்றி, சிறந்த பங்காளிகளாக திகழ வேண்டும் என சீனா ஜனாதிபதி சீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு உத்தயோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதிக்காக நேற்று (வியாழக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்துபசார நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயமொன்றை தொடங்குவதற்கான சிறந்த ஆரம்பமாக இது அமைந்துள்ளது. இதன்மூலம் அனைத்து மனிகுலத்தின் எதிர்காலத்திற்கும் புதிய பங்களிப்பை செய்ய முடியும்.

பகிரப்பட்ட நல்னகளுடன் சீனாவும் அமெரிக்காவும் முன்னேற்றகரமான சமூகமாக உருவெடுத்து வருகிறது. உலக சமாதானத்தை பாதுகாத்தல் மற்றும் பொதுவான வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றில் இரு நாடுகளும் கனமான பொறுப்புகளை வகித்து வருகிறது என்றார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி, சீன ஜனாதிபதியின் அன்பான வரவேற்பிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு இரு தரப்பினருக்கும் பயனளிப்பதுடன், உலகின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கும் வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg