Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் புதிய நகரசபை உருவாக்க கோரி ஆர்ப்பாட்டம்!

In இலங்கை
Published: 07:27 GMT, Nov 10, 2017 |
0 Comments
1134
icon_com
This post was written by : Ravivarman

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடிப் பாலம் தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையான பகுதியை நகரசபையாக உருவாக்க கோரியும், குறித்த பகுதிகளில் உள்ள பகுதியைக் காத்தான்குடி நகரசபையுடன் இணைப்பதை நிறுத்துமாறு கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டமும் கவனயீர்ப்பு பேரணியும் மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்லடி, உப்போடை சிவானந்த விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“எங்களை காத்தான்குடியுடன் இணைக்காதீர்கள், தமிழரின் பாரம்பரியத்தினை அழிக்காதீர்கள், நில – நிர்வாக ஆக்கிரமிப்பினை தடுத்து நிறுத்துங்கள்” என்ற தலைப்புடன் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவி திருமதி செல்வி மனோகர் உட்பட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், மகளிர் சங்க உறுப்பினர்கள், இளைஞர் கழக மற்றும் விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

“பிரிக்காதே பிரிக்காதே எமது எல்லைகளைப் பிரிக்காதே, எமக்கு தனியான நகரசபை வேண்டும், எமது பகுதியை இன்னுமொரு பகுதியுடன் இணைப்பதை ஏற்கமாட்டோம்” போன்ற கோசங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினர்.

கல்லடிப் பாலம் தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையான பகுதியான பகுதி தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதுடன் அங்கு 13க்கும் மேற்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளும் 25000 இற்கும் மேற்பட்டவர்கள் வாழ்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

DSC09238 DSC09215 DSC09207 DSC09193 DSC09186

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)