Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொறாமையுள்ளவர்களே தோனியின் ஓய்வை எதிர்பார்க்கின்றனர் : ரவி சாஸ்திரி

In கிாிக்கட்
Updated: 07:48 GMT, Nov 10, 2017 | Published: 07:47 GMT, Nov 10, 2017 |
0 Comments
1594
This post was written by : Elakkiya
dhoni

இந்திய அணியின் முன்னணி வீரர் மகேந்திரசிங் தோனியின் ஓய்வை பொறாமை எண்ணம் கொண்டவர்களே எதிர்பார்ப்பதாக அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சுற்றிலும் பொறாமை கொண்டவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் தோனியின் கிரிக்கட் வாழ்க்கை நிறைவை விரும்புகின்றனர். தோனியின் முடிவை காண்பதற்கு காத்திருக்கின்றனர். ஆனால் அவரைப் போன்ற சிறந்த வீரர்கள் தமது எதிர்காலத்தை தாமே முடிவு செய்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தோனியின் மதிப்பு இந்திய அணிக்கு நன்றாகவே தெரியும் என்றும் தோனி மீதான இத்தகைய விமர்சனங்கள் இந்திய அணி வீரர்களின் எண்ணங்களில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதுடன் அவர் மிகச்சிறந்த கிரிக்கட் வீரர்களில் ஒருவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg