Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல்லியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளத் தடை: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

In இந்தியா
Updated: 08:03 GMT, Nov 10, 2017 | Published: 08:03 GMT, Nov 10, 2017 |
0 Comments
1248
This post was written by : Kemasiya

டெல்லியில் காற்றின் மாசடைவு மற்றும் பனிமூட்டத்தின் புகை காரணமாக, கட்டுமான பணிகள், தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

குறித்த புகை மூட்டத்தினால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்படுவதாகவும், விபத்துக்கள் அதிகரித்து வருவதாகவும் கூறி, பசுமை தீர்ப்பாயத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, தீர்ப்பாய தலைவர் (நீதிபதி) சுவாந்தந்தர் மேற்படி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த உத்தரவைத் தொடர்ந்து, இவ் வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேல் நீதிமன்றம், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமை ஆணையகம் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும், பயிர்க்கழிவுகளை எரிக்கும் பஞ்சாப்- ஹரியான அரசு அதை நிறுத்த வேண்டும் எனவும் கோரி, நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரியவருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg