Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரவணைக்கும் பாதீடு – ஹக்கீமின் கருத்து

In இலங்கை
Published: 07:54 GMT, Nov 10, 2017 |
0 Comments
1218
icon_com
This post was written by : Arul Jesu

வரவு செலவுத்திட்டம் பசுமை புரட்சியை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது என அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பாதீடு தொடர்பில் ஆதவன் செய்திப் பிரிவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பாதீட்டின் மூலம் அனர்த்த முகாமைத்துவத்தை கையாளக்கூடிய பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் நாட்டில் உள்ள அனைத்து பிராந்தியங்களிலும் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் பாதீடாக இது அமைந்தள்ளதாக தெரிவித்த அமைச்சர், இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவக்கூடிய வகையிலும்  இந்த பாதீடு அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மொத்தத்தில் நாட்டில் வாழும் அனைத்து மக்களையும் அரவணைத்து செல்ல கூடிய வரவு செலவு திட்டமாக இது அமைந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg