Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் காயம்- நாதன் கோல்டர் நைலின் ஆஷஸ் வாய்ப்பு நழுவியது

In கிாிக்கட்
Updated: 08:03 GMT, Nov 10, 2017 | Published: 08:02 GMT, Nov 10, 2017 |
0 Comments
1187
icon_com
This post was written by : Elakkiya
Nathan-Coulter-Nile

முதுகுவலி காரணமாக அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் கோல்டர் நைல் சிறிது காலம் ஓய்வெடுக்கவுள்ளதாக அவுஸ்ரேலிய கிரிக்கட் சபை அறிவித்துள்ளது. இதன்காரணமாக எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆஷஸ்தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நீண்டகாலமாக, முதுகெலும்பு அழுத்த முறிவு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள கோல்டர் நைலுக்கு கடந்த வாரம் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான தொடரில் முதுகுவலி ஏற்பட்டது.

அதனையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், ஏற்கனவே இருந்த முதுகெலும்பு அழுத்த முறிவு மேலும் மோசமடைந்திருப்பது கண்டறியப்பட்டது.

இதன்காரணமாக சிறிது காலம் அவருக்கு ஓய்வு  வழங்க தீர்மானித்துள்ளதாக அவுஸ்ரேலிய கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. எனினும் அவரால் பந்து வீச முடியுமா என்பதை தீர்மானிப்பதற்காக அடுத்த மாதம் மீண்டும் ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg